தனுஷின் 'கர்ணன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், யோகி பாபு, ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படம் உருவான விதம் உள்ளிட்ட சிறு வீடியோக்களை மட்டுமே வெளியிட்டது. இன்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு 'கர்ணன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாக ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் 'கர்ணன்' வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்கா சென்றுள்ளார் தனுஷ். அங்கிருந்து மே மாதம் இந்தியா திரும்பும் தனுஷ், மீண்டும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்