மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறார் கமல். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடவுள்ளார். இதனால் 'விக்ரம்' படத்தின் பணிகள் இன்னும் முழுவீச்சில் தொடங்கப்படவில்லை.
இதனால் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமொன்றைக் குறைந்த நாட்களில் படமாக்கி முடிக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.
» 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம் அறிவிப்பு
» பாலு மகேந்திரா நினைவுநாள்: சினிமாவுக்காக வாழ்ந்த தனிநபர் இயக்கம்
இது தொடர்பாக விசாரித்த போது, "முதலில் 'விக்ரம்' படத்தைத் தான் இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படமே பெரிய பொருட்செலவில் தயாராகவுள்ளதால், முதற்கட்ட பணிகளுக்கே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளார். படப்பிடிப்பு ஆரம்பித்தால் எந்தவித தடங்கலும் இல்லாத வகையில் சரியாகத் திட்டமிடப்பட்டு வருகிறது.
'விக்ரம்' படத்தை முடித்தவுடன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை" என்று தெரிவித்தார்கள். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி சின்ன பட்ஜெட் படமொன்றில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்பது உறுதியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago