ஹிப் ஹாப் தமிழாவின் 'சிவகுமாரின் சபதம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஹிப் ஹாப் தமிழா இயக்கத்தில் உருவாகியுள்ள படத்துக்கு 'சிவகுமாரின் சபதம்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

ஒரே சமயத்தில் நடிகராகவும், இயக்குநராகவும் ஹிப் ஹாப் தமிழா அறிமுகமான படம் 'மீசைய முறுக்கு'. ஆத்மிகா, விவேக், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 2017-ம் ஆண்டு இந்தப் படத்துக்குப் பிறகு ஹிப் ஹாப் தமிழா படம் எதுவும் இயக்கவில்லை.

'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்களில் நாயகனாக மட்டுமே நடித்திருந்தார். தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார் ஹிப் ஹாப் தமிழா. இதில் நாயகனாகவும் நடித்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

சத்தமின்றி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் ஹிப் ஹாப் தமிழா. அவருடன் யாரெல்லாம் நடித்துள்ளார் உள்ளிட்ட விவரம் எதுவும் வெளியாகவில்லை. 'சிவகுமாரின் சபதம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக அர்ஜுன்ராஜா, எடிட்டராக தீபக், கலை இயக்குநராக வாசுதேவன் ஆகியோர் பணிபுரிந்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்