'தி க்ரே மேன்' ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக, நாளை அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார் தனுஷ்.
கடந்த ஆண்டு 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ், இந்தப் படத்தை 'தி க்ரே மேன்' என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் 'கேப்டன் அமெரிக்கா'வாக நடித்த க்றிஸ் ஈவான்ஸும், 'லா லா லேண்ட்', 'ஃபர்ஸ்ட் மேன்' ஆகிய படங்களின் நாயகன் ரயன் காஸ்லிங்கும் நடிக்கின்றனர்.
அவர்களுடன் தனுஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது என்பதே தெரிவிக்கப்படாமல், முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.
தற்போது 'தி க்ரே மேன்' படப்பிடிப்பு அமெரிக்காவில் 2 மாதங்கள் நடைபெறவுள்ளது. இதற்காக தனுஷ் நாளை (பிப்ரவரி 9) அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார். அங்கு இதர ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மே மாதம் தான் தமிழகம் திரும்புகிறார் தனுஷ்.
» சர்வதேச விருது வென்ற ‘கூழாங்கல்’- விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி
» பிரச்சினைகளுக்குத் தீர்வு: 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் கிளம்பவுள்ளதால், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். மே மாதம் சென்னை திரும்பியவுடனே கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் தனுஷ்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago