10,000 கி.மீ பைக் பயணத்தை அஜித் முடித்திருப்பதாக உடன் பயணித்தவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் அஜித் பங்கேற்கவுள்ளார். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தூர பைக் பயணத்தைத் தொடங்கினார் அஜித். தனக்கு மிக நெருங்கிய நண்பர்களுடன் இந்த பயணத்தைத் திட்டமிட்டு இருந்தார். எந்த வழியாக எங்குச் சென்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டது.
இடையே, சாலையோர உணவகம் வைத்திருப்பவரின் மகன் படிப்புச் செலவை அஜித் ஏற்றிருப்பதாகச் செய்தி மட்டுமே வெளியானது. தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஹைதராபாத் திரும்பியுள்ளார் அஜித். தன்னுடன் பயணித்த அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
» ஸ்பானிஷ் திரைப்பட ரீமேக்கில் ஆர்.எஸ்.பிரசன்னா - ஆமிர் கான் இணை?
» 'மின்னலே' வெளியாகி 20 ஆண்டுகள்: என்றென்றும் 'வசீகரி'க்கும் காதல் படம்
இதில் அஜித்துடன் பயணித்த தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுக் கூறியிருப்பதாவது:
"அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை - கோவை -சென்னை - ஹைதராபாத் - வாரனாசி - காங்டாக் - லக்னோ - அயோத்யா - ஹைதராபாத் - சென்னை என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித் அவர்கள்தான். சுத்தமான தங்கம்”
இவ்வாறு தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுக்கு ரசிகர் ஒருவர், வீடியோ எடுத்திருந்தால் அதை யூடியூப் தளத்தில் வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தினேஷ் குமார், "இல்லை, என்றும் கிடையாது. எனக்கு அஜித் அவர்களைத் தெரியும். அவருக்குத் தனிப்பட்டு இருப்பது பிடிக்கும். நாம் அவரை மதிக்கிறோம் என்றால் அவரது இந்த விருப்பத்தையும் மதிக்க வேண்டும். நான் அவருடன் வண்டி ஓட்டியிருக்கிறேன்.
எனது ஹெல்மெட்டில் கேமராவை வைக்கவில்லை. என் மொபைலில் புகைப்படம் எடுக்கவில்லை. இந்த புகைப்படம் அஜித் அவர்களின் சம்மதத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரே மூச்சில் அவர் 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை முடித்துவிட்டார் என்பதை உங்களிடம் சொல்வதற்காக. மற்றவர்கள் 5000 கிலோமீட்டர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரும் அவர் நண்பர்களும் 10,000க்கும் அதிகமாகப் பயணப்பட்டுள்ளனர். அவர் பைக் பயணத்தின் தீவிர ரசிகர்" என்று தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
விரைவில் அஜித் பங்கேற்கும் 'வலிமை' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago