விரைவில் இயக்குநராகும் போனி கபூர்

By செய்திப்பிரிவு

விரைவில் இயக்குநராக உள்ளதைத் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தித் திரையுலகில் முன்னணித் தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். தற்போது தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் உருவான 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தயாரித்தார். தற்போது அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தைத் தயாரித்து வருகிறார்.

நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார் போனி கபூர். விரைவில் இயக்குநராக அறிமுக உள்ளதைப் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து போனி கபூர் கூறியிருப்பதாவது:

"எனக்குத் திரைப்படம் இயக்க விருப்பம். 25 வயதிலிருந்து திரைப்படங்கள் தயாரித்து வருகிறேன். 'ஹம் பான்ச்' திரைப்படத்தை அப்போதுதான் தயாரித்தேன். இது நான் இயக்குவதற்கான நேரம் என்று நினைக்கிறேன். விரைவில் அது நடக்கும். இந்த நிச்சயமற்ற காலகட்டத்தில் நமக்கு விரும்பியதை இன்னொரு நாளைக்கு ஒத்திவைக்காமல் செய்துவிடுவது நல்லது".

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்