பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கவுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டிருந்தது.

இப்படத்தில் சர்வதேச கிராபிக்ஸ் நிறுவனங்களைக் கொண்டு அதி நவீன விஷுவல் எஃபெக்ஸ் காட்சிகளை உருவாக்கவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் ‘ஆதிபுருஷ்’ படப்பிடிப்பு தொடங்குவதாகப் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்துள்ள அவர், இது தொடர்பாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

‘ஆதிபுருஷ்’ திரைப்படம் 2022, ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE