விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா ஊரடங்கு சமயத்தில் வெளியிடப்பட்ட, இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதலில் இந்தப் படம் ஓடிடி வெளியீடாக இருந்தது.
ஆனால், 'மாஸ்டர்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தற்போது திரையரங்க வெளியீடாக மாறியுள்ளது. முதலில் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து ஒரு வாரம் தள்ளி, பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
'சக்ரா' பணிகளை முடித்துவிட்டதால், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'எனிமி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago