சிம்புவுக்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்ற தகவலுக்கு அவருடைய தரப்பு மறுப்பு தெரிவித்தது.
'மாநாடு', 'பத்து தல' ஆகிய படங்களைத் தொடர்ந்து, கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதற்காக சிம்புவுக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 'ஜோஷ்வா' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். அதை முடித்துவிட்டு சிம்பு படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக நயன்தாரா தரப்பில் விசாரித்த போது, "இதுவரை அப்படி எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆகையால் இதில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்கள். இதன் மூலம் சிம்பு - நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள செய்தி வெறும் வதந்தி என்பது உறுதியாகிறது.
'வல்லவன்' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய படங்களில் மட்டுமே சிம்பு - நயன்தாரா ஜோடி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago