ஹெச்பிஓ தளத்தில் மாபெரும் சாதனை படைத்த 'வொண்டர் வுமன் 1984' 

By ஏஎன்ஐ

2017ஆம் ஆண்டு வெளியான 'வொண்டர் வுமன்' திரைப்படத்தின் முதல் பாகம் விமர்சனங்களில் அதிக பாராட்டைப் பெற்று கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்தது. அடுத்த பாகமான 'வொண்டர் வுமன் 1984' வெளியீடு, கரோனா நெருக்கடி காரணமாக பல முறை தள்ளிப்போடப்பட்டது. முடிவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்கிலும், ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு வெளியானது.

இந்நிலையில் ஹெபிஓ தளத்தில் 'வொண்டர் வுமன் 1984' திரைப்படம் மாபெரும் சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீல்சன் தரவரிசைப் பட்டியலில் அதிக நிமிடங்கள் பார்க்கப்பட்ட படங்களில் ‘வொண்டர் வுமன்’ முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான முதல் வாரத்தில் ஹெச்பிஓ தளத்தில் 2.25 பில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக நீல்சன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் 14.9 மில்லியன் முறை முழுமையாக பார்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதற்கு முன்பு 1.67 பில்லியன் நிமிடங்கள் நிமிடங்கள் பார்க்கப்பட்டு முதலிடத்தில் இருந்த டிஸ்னி பிக்ஸாரின் ‘சோல்’ திரைப்படத்தை விட 580 மில்லியன் நிமிடங்கள் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது ‘வொண்டர் வுமன்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE