டூடுல் ஓவியக் கலைஞரைக் காதலிக்கும் ஸ்ருதி ஹாசன்

By செய்திப்பிரிவு

நடிகை ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹஸரிகா என்கிற டூடுல் ஓவியக் கலைஞரைக் காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைக்கேல் கோர்ஸேல் என்கிற இசைக் கலைஞரை நீண்ட நாட்களாக ஸ்ருதி ஹாஸன் காதலித்து வந்தார். 2019-ம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இதுகுறித்து மைக்கேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரிந்தாலும் ஸ்ருதிஹாசன் தனது மிகச்சிறந்த தோழி என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் பகிராமலேயே இருந்தார். சில நாட்களுக்கு முன், தான் காதலில் இருப்பதாக ஸ்ருதி ஹாசன் உறுதிப்படுத்தினாலும் யாரைக் காதலிக்கிறார் என்பதைப் பற்றிச் சொல்லவில்லை.

டூடுல் ஓவியக் கலைஞர் சாந்தனு ஹஸரிகா என்பவரை ஸ்ருதி ஹாசன் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கவுஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு சிறந்த டூடுல் கலைஞர் என்கிற சர்வதேசப் போட்டியை 2014-ம் ஆண்டு வென்றவர். பல்வேறு சர்வதேச-இந்திய இசைக் கலைஞர்களுடன் சாந்தனு பணியாற்றியுள்ளார். பொறியியல் படித்து டூடுல் துறையில் நுழைந்தவர் அவர்.

வியாழக்கிழமை ஸ்ருதி ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளவரசியே’ என்று அவரை வாழ்த்தி சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், அவரது ட்விட்டர் ப்ரொபைல் புகைப்படமாக, ஸ்ருதியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையே வைத்துள்ளார். சமீபத்தில் இருவரும் மும்பையில் ஒன்றாக வெளியே சென்ற படங்களும், ஹைதராபாத் விமான நிலையத்தில் ஒன்றாக வந்திறங்கிய புகைப்படங்களும் வெளியாகின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்