மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்: பா.இரஞ்சித் தயாரிக்கிறார்

By செய்திப்பிரிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தை பா.இரஞ்சித் தயாரிப்பது உறுதியானது.

தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. ஏப்ரல் 9-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். முழுக்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்காக தன் உடலமைப்பை மாற்றித் தயாராகியுள்ளார் துருவ் விக்ரம். இந்தப் படம் உறுதியாகிவிட்டாலும், தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகாமல் இருந்தது.

இந்நிலையில், இன்று (ஜனவரி 28) மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தை பா.இரஞ்சித் தயாரிப்பது உறுதியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.

'கர்ணன்' பணிகளை முடித்துவிட்டு, துருவ் விக்ரம் படத்தின் முதற்கட்டப் பணிகளை மாரி செல்வராஜ் தொடங்குவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்