2டி நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் தனது மகனுடன் இணைந்து நடித்து வருகிறார் அருண் விஜய்.
2டி நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சரவ் சண்முகம் இயக்கி வரும் இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் விஜயகுமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்ணவ் விஜய்.
தற்போது இந்தப் படத்தில் ஆர்ணவ் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் அருண் விஜய்யே நடித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் சரவ் சண்முக கூறியிருப்பதாவது:
"இந்தக் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப் படத்தில் விளம்பரத்திற்காகவும், ஆர்ணவ் விஜய்க்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார்.
நான் திரைக்கதையைக் கூறிய பிறகு அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாபாத்திரம் குறித்து நிறையக் கேட்டுத் தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.
ஆர்ணவ் விஜய் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது"
இவ்வாறு அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக மேகா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago