இணையத்தில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் #KuttyThala என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
எந்தத் திரையுலக விழாக்களிலும் அஜித் கலந்து கொள்வதில்லை. படப்பிடிப்புத் தளங்கள், நெருங்கிய நண்பர்களின் விழாக்கள் ஆகியவற்றில் மட்டுமே கலந்து கொள்வார். அதிலும் அவருடைய குடும்பத்தினரின் புகைப்படங்கள் வெளியாவது என்பது மிகவும் அரிது.
தற்போது திருமண விழா ஒன்றில் அஜித்தின் குடும்பத்தினர் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதில் அஜித் இல்லை என்றாலும் மனைவி ஷாலினி, அவரது தங்கை ஷாமிலி, சகோதரர் ரிச்சர்ட் மற்றும் அஜித்தின் மகன் ஆத்விக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் புகைப்படங்களில் ஆத்விக்கின் குறும்புத்தனமான படங்கள்தான் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இவரை ரசிகர்கள் குட்டி தல என்றே அழைத்து வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் அனைவரும் பகிர்ந்து #KuttyThala என்று குறிப்பிட்டதால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
தற்போது அஜித் பைக் பயணத்தில் இருப்பதால் இந்தத் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது. நீண்ட தூர பைக் பயணத்தை முடித்தவுடன், 'வலிமை' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago