இந்தியாவில் பாஃப்டாவின் முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் - ஏ.ஆர். ரஹ்மான்

By ஐஏஎன்எஸ்

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிக் கலைகளுக்கான பிரிட்டிஷ் அகாடமி (பாஃப்தா), ’ப்ரேக்த்ரூ இனிஷியேட்டிவ்’ என்கிற முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் திரைப்படங்கள், விளையாட்டு அல்லது தொலைக்காட்சியில் ஐந்து திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொண்டாடி, அங்கீகரிக்கவுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சிக்குத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்

இதில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடுவை பாஃப்டா அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று (21.02.21) இந்த காலக்கெடு ஜனவரி 25 முதல் பிப். 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாஃப்டா அறிவித்துள்ளது.

இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் பாஃப்டாவின் இந்த முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பை கண்டு மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளில் எல்லாம் திறமையாளர்களை காண இயலும் என்பதை நிரூபிக்கும் வகையில், நாடு முழுவதிலிருந்தும் எங்களுக்கு விண்ணப்பங்கள் குவிகின்றன. பிப்.8 வரை காலகெடுவை பாஃப்டா நீட்டித்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE