பள்ளிச் செல்ல முடியாமல் தவித்த சிறுவனின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ளார் அஜித். இதனால் அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கியது படக்குழு.
அஜித்துக்கு எப்போதுமே பைக்கில் பயணம் என்பது மிகவும் பிடிக்கும். நீண்ட நாட்களாகவே பைக்கில் நீண்ட தூரம் பயணத்தைத் தவிர்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பைக்கிலேயே சிக்கிமிற்கு பயணப்பட்டார் அஜித். அவருக்கு மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவருடன் இந்தப் பயணத்தில் பங்கேற்றார்கள்.
இந்தப் பயணத்துக்கு இடையே வாரணாசியில் ஒரு கடையில் உணவருந்தியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது நினைவு கூரத்தக்கது. அந்தக் கடையில் பள்ளிச் சீருடை அணிந்து பணி செய்திருக்கிறான்.
உடனே அந்தச் சிறுவன் குறித்து விசாரித்திருக்கிறார் அஜித். கடைக்காரரின் மகன் தான் எனவும், கரோனா அச்சுறுத்தலால் கடை மூடப்பட்டே இருந்ததால் பள்ளிக்குக் கட்டணம் செலுத்த முடியாமல் பணி செய்து வருவது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. உடனடியாக அந்தச் சிறுவனின் முழுக் கல்விச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று வாக்குறுதிக் கொடுத்திருக்கிறார் அஜித்.
தன்னுடன் பயணப்பட்ட நண்பர்களிடம், அந்தச் சிறுவன் குறித்த விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் அஜித். இந்தச் செயலால் கடையின் முதலாளி அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி, அஜித்துக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago