மார்வல் திரைப்படங்களில் மீண்டும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் தான் நடிப்பது குறித்து வரும் செய்திகளை நடிகர் க்றிஸ் ஈவன்ஸ் மறுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்தோடு கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் விடைபெற்றது. இனி தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கப் போவதில்லை என்றும் நடிகர் க்றிஸ் ஈவன்ஸ் கூறியிருந்தார். ஆனால் புதிய மார்வல் திரைப்படத்தில் அவர் மீண்டும் கேப்டன் அமெரிக்காவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்திருந்தன.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கே இது புதிய செய்திதான்" என்று பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் சூப்பர்ஹீரோவாக நடிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு 'கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்' திரைப்படம் மூலம் க்றிஸ் ஈவன்ஸ் மார்வல் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 'கேப்டன் அமெரிக்கா: விண்டர் சோல்ஜர்', 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' என இந்தக் கதாபாத்திரத்தை வைத்து மூன்று படங்கள் வந்தன. மேலும் 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட மார்வல் திரையுலகின் மற்ற சூப்பர்ஹீரோ படங்களிலும் க்றிஸ் ஈவன்ஸ் கேப்டன் அமெரிக்காவாக நடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago