'மாஸ்டர்' காட்சிகள் லீக் ஆனதின் பின்னணி: நடவடிக்கை எடுக்கப் படக்குழு தீவிரம்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தின் காட்சிகள் எப்படி, எங்கிருந்து லீக்கானது என்பதன் விவரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் படக்குழு தீவிரமாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார்.

நாளை (ஜனவரி 13) இப்படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படத்தைத் திரையரங்குகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று (ஜனவரி 12) மாலை திடீரென்று படத்தின் சில காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக இணையத்தில் லீக் ஆயின. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். யாரும் இந்தக் காட்சிகளைப் பகிராதீர்கள், எங்களுடைய ஒன்றரை ஆண்டு உழைப்பு என்று இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே, எங்கிருந்து எப்படி இந்தக் காட்சிகள் வெளியாயின என்ற விசாரணையைத் தொடங்கியது படக்குழு. எங்கெல்லாம் படத்தின் ஹார்ட் டிஸ்க் கொடுத்தோம் மற்றும் லீக்கான காட்சிகளில் இடம்பெற்ற இடங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ந்து வந்தது. இதில் சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் மூலம் லீக்காகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் சோனி புரொஜக்டர்கள் உள்ள திரையரங்குகளுக்குப் படத்தினை இந்த நிறுவனம் மூலமாகவே அனுப்ப முடியும். அப்படிப் படத்தை அனுப்புவதற்கு முன்பு, ஒரு முறை முழுமையாகத் திரையிட்டு செக் செய்வார்கள். அப்படி செக் பண்ணும்போதுதான் மொபைலில் எடுத்து வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது படக்குழு. அந்த நிறுவனத்திடமிருந்து 'மாஸ்டர்' படத்துக்கான ஹார்ட் டிஸ்க்கைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது. அப்படி வாங்கும் பட்சத்தில், சோனி புரொஜக்டர்கள் இருக்கும் திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியாவது சாத்தியமில்லை.

தமிழகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சோனி புரொஜக்டர்கள் உள்ளன. இதனால் வசூலிலும் பாதிப்பு உண்டாகும். என்ன செய்யலாம், எந்த வழியில் நடவடிக்கை எடுக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் 'மாஸ்டர்' படக்குழு இறங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்