கேப் (Cab) டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு 'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தமிழில் 'பூமிகா', 'திட்டம் இரண்டு', 'துருவ நட்சத்திரம்', 'இது வேதாளம் சொல்லும் கதை' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'டக் ஜெகதீஷ்' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்து டி.டி.ஹெச் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட 'க/பெ ரணசிங்கம்' படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று (ஜனவரி 10) ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பிறந்த நாள். காலை முதலே பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய படமொன்றை அறிவித்துள்ளனர். 'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கேப் (cab) டிரைவராக நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரியவுள்ள இந்தப் படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago