'தங்கம்' படத்தில் சிறப்பாக நடித்த காளிதாஸை விஜய் பாராட்டினார்.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியான ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக் கதைகள்'. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கினர். இந்தப் படங்கள் அனைத்துமே ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதைகளாகும்.
இதில் சுதா கொங்கரா இயக்கிய 'தங்கம்' குறும்படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலருமே 'தங்கம்' குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள். இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காளிதாஸ். அவருடைய நடிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
தற்போது, காளிதாஸை நேரில் வரவழைத்து விஜய் பாராட்டியுள்ளார். இந்தச் சந்திப்பு விஜய்யின் அலுவலகத்தில் நடைபெற்றது. 'தங்கம்' படத்தில் அவருடைய நடிப்பைக் குறிப்பிட்டு விஜய் நீண்ட நேரம் பேசியதால் மிகவும் நெகிழ்ந்து விட்டாராம் காளிதாஸ். மேலும், தான் எந்த அளவுக்குத் தீவிரமான ரசிகன் என்பதையும் விஜய்யிடம் கூறியுள்ளார்.
» இங்கு நிற்பதற்குக் காரணம் நீங்கள்தான்: அஸ்வின் பதிலால் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்
» 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்: முக்கியக் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார்
காளிதாஸை மட்டுமன்றி சாந்தனுவையும் தொலைபேசி வாயிலாகப் பாராட்டியுள்ளார் விஜய். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் விஜய்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago