சித் ஸ்ரீராமுக்குப் புகழாரம் சூட்டிய மிஷ்கின்

By செய்திப்பிரிவு

தனது ட்விட்டர் பதிவில் பாடகர் சித் ஸ்ரீராமிற்குப் புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

ஆண்ட்ரியா நடிக்கும் 'பிசாசு 2' படத்தை இயக்கவுள்ளார் மிஷ்கின். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் பூர்ணாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா பணிபுரியவுள்ளார். கபிலன் 2 பாடல்களை எழுதியுள்ளார். இதில் ஒரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வரிகளும், இசையும் மிகவும் பிடித்துப் போகவே அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடிக் கொடுத்துள்ளார் சித் ஸ்ரீராம்.

முன்னதாக, 'பிசாசு 2' படத்துக்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித் ஸ்ரீராம் பாடியிருப்பது குறித்து இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று சித் ஸ்ரீராம் 'பிசாசு 2' படத்துக்காக அழகான பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். எந்தப் பாடலைப் பாடினாலும் அதை உயர்த்தக்கூடிய மனதை மயக்கும், ஆன்மாவைத் தொடும், அமைதியான ஒரு குரல் அவரிடம் உள்ளது. சித், நீங்கள் எங்களுக்குக் கிடைத்த வரம்".

இவ்வாறு மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்