'மாஸ்டர்' டீஸர்: பன்ச் வசனம், ஆண்ட்ரியா, மகேந்திரன் இல்லாதது ஏன்?- லோகேஷ் கனகராஜ் பதில்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' டீஸரில் ஆண்ட்ரியா காட்சிகள் இடம்பெறாதது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். ஜனவரி 13-ம் தேதி அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

'மாஸ்டர்' படத்தின் டீஸர் மற்றும் 3 ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது படக்குழு. ஆனால், அதில் ஆண்ட்ரியா, மகேந்திரன் உள்ளிட்ட சிலருடைய காட்சிகள் எதுவுமே எடுபடவில்லை. தனது காட்சி எதுவுமே இடம்பெறவில்லை என்பதால் ஆண்ட்ரியா கோபத்தில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆண்ட்ரியா உள்ளிட்டோரின் காட்சிகள் டீஸரில் இடம்பெறாதது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

"ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகேந்திரன், பூவையார் உள்ளிட்ட பலரையும் காட்டவில்லை. அதேபோல் விஜய் சாருடைய படத்தின் டீஸரில் அவருடைய பன்ச் வசனங்கள் இருக்கும். அதை டீஸரின் முடிவில் வைப்பார்கள். இதில் விஜய் சாரின் பன்ச் வசனங்கள் பேசவில்லை. ஆகையால், டீஸரை வசனங்களே இல்லாமல் வைத்தோம். வேறு எந்தவொரு காரணமும் இல்லை".

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்