இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்கள் பிரார்த்தனைகளுக்கும், இரங்கல் செய்திகளுக்கும் நன்றி என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அதற்கு ஒட்டுமொத்தத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜனவரி 6-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
தனது அம்மா காலமானதற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது:
"இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்கள் பிரார்த்தனைகளுக்கும், இரங்கல் செய்திகளுக்கும் நன்றி. உங்கள் அன்பு மற்றும் அக்கறையை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும்".
» 'கே.ஜி.எஃப் 2' கதாபாத்திரம் சக்தி வாய்ந்தது; சிக்கலானதும் கூட: ரவீனா டண்டன்
» திரையரங்குகளுக்கு 100% இருக்கைக்கு அனுமதி வேண்டும்: அமித் ஷாவுக்கு தயாரிப்பாளர் தாணு கோரிக்கை
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாளை (ஜனவரி 9) அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago