'கே.ஜி.எஃப் 2' படத்தின் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கே.ஜி.எஃப் 2'. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், 2-ம் பாகத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
'கே.ஜி.எஃப் 2' படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை இணைத்துள்ளார் பிரசாந்த் நீல். இன்று (ஜனவரி 8) நாயகன் யாஷுக்கு பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு 'கே.ஜி.எஃப் 2' டீஸர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இன்று (ஜனவரி 8) வெளியாகவிருந்த டீஸரை, ரசிகர்களுக்காக நேற்றிரவே (ஜனவரி 7) இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். காட்சிகளில் உள்ள பிரம்மாண்டம், மாஸான காட்சிகள் என ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
» நான் எப்போதும் சட்டத்தை மதிப்பவன்: மும்பை மாநகராட்சியின் புகார் குறித்து சோனு சூட் விளக்கம்
இதுவரை 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 'கே.ஜி.எஃப் 2' டீஸர். பல்வேறு இந்தியத் திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago