அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் நடிக்கும் 'தான்க் காட்’

By ஏஎன்ஐ

'தான்க் காட்' என்கிற நகைச்சுவைப் படத்தில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங் அஜய் தேவ்கனுடன் ‘தே தே ப்யார் தே’ படத்திலும், சித்தார்த்துடன் ’மர்ஜாவன்’ படத்த்திலும் நடித்திருந்தார். நாயகர்கள் ஒருவரும் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை. ஜனவரி 21 முதல் தான்க் காட் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இந்திர குமார் இயக்க, பூஷன் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

"இது வாழ்க்கையை பற்றிய பொழுதுபோக்கான திரைப்படம். ஒரு கருத்து இருக்கும். எனக்குப் பல வருடங்களாகப் பரிச்சயமான அஜய் தேவ்கனுடன் மீண்டும் பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறேன். மேலும் இளம் ரத்தங்கள் சித்தார்த்தும், ரகுலும் உள்ளனர். படத்தைப் பற்றிய அறிவிப்பை அஜய் தேவ்கனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பூஷன் குமார், டி சீரிஸ் அணியுடன் இணைவதிலும் எனக்கு மகிழ்ச்சி. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம், எனவே எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறோம். சிறப்பான 2021 அமையும் என்று எதிர்நோக்கியுள்ளேன்" என்று இந்திர குமார் கூறியுள்ளார். ’மஸ்தி’, ’தமால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இந்திர குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்