அரசு மருத்துவமனையில் வசதி இருக்காது: அடம்பிடித்த ‘ஆதித்யா வர்மா’ நடிகை - கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்த சுகாதாரத் துறை அதிகாரிகள்

By பிடிஐ

‘ஆதித்யா வர்மா’ மற்றும் ‘அக்டோபர்’ ஆகிய படங்களில் நடித்தவர் பனிதா சந்து. லண்டனைச் சேர்ந்த அவர் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தாவில் இருக்கிறார்.

கடந்த டிசம்பர் 20ஆம் தேதி அன்று ‘கவிதா அண்ட் தெரசா’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பனிதா விமானம் மூலம் கொல்கத்தா வந்துள்ளார். அவர் பயணம் செய்த அதே விமானத்தில் லண்டனில் இருந்து திரும்பிய ஒரு இளைஞரும் இருந்துள்ளார். அந்த இளைஞருக்கு உருமாறிய கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனால் அவரோடு பயணம் செய்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்ப்பட்டுள்ளது. பரிசோதனையில் பனிதாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பெலகாட்டா அரசு கரோனா தொற்று மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் மருத்தவமனையை அடைந்ததும் பனிதா கீழ இறங்க மறுத்துள்ளார். அரசு மருத்துவமனையில் சரியான வசதிகள் இருக்காது எனவும் தன்னை விட்டுவிடுமாறும் கூறி அடம்பிடித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

பனிதா ஆம்புலன்ஸிலிருந்து இறங்க மறுத்ததால் நாங்கள் மாநில தலைமை செயலகத்துக்கும், சுகாதாரத் துறைக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தோம். ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல விரும்பினார். அப்படி அவரை போகவிடுவது விதிமுறைகளுக்கு எதிரனாது என்பதால் நாங்கள் பிரிட்டிஷ் உயர் ஆணையத்துக்கு தகவல் கொடுத்தோம். காவல்துறையிடமும் தெரிவித்தோம். காவல்துறை வந்ததும் ஒருவழியாக சுகாதாரத் துறையின் அனுமதி பெற்று தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம்.

இவ்வாறு அவர் கூறினர்.

பனிதாவுக்கு இருப்பது புதிய வகை கரோனாவா என்பது குறித்து அறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்