அறிமுக இயக்குநருடன் இணையும் விஷால்: ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிப்பு

By செய்திப்பிரிவு

நடிகர் விஷால் அடுத்ததாக து.ப சரவணன் என்கிற அறிமுக இயக்குநரின் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்தின் பூஜை வெள்ளிக்கிழமை அன்று நடந்து முடிந்தது.

’ஆக்‌ஷன்’ திரைப்படத்துக்குப் பிறகு புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் ’சக்ரா’, ’துப்பறிவாளன் 2’, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ’எனிமி’ உள்ளிட்ட படங்களில் விஷால் நடிக்கிறார். இதில் ’துப்பறிவாளன் 2’ திரைப்படத்தை விஷாலே இயக்குகிறார். எனிமி திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார்.

அடுத்ததாக, பல விருதுகள் வென்ற, 'எது தேவையோ அதுவெ தர்மம்' என்கிற குறும்படத்தை இயக்கிய து.ப சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. விஷாலே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பூஜை நடந்து முடிந்தது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தப் படம் குறித்து இயக்குநர் சரவணன், 'இயக்குநராக எனது முதல் திரைப்படம் நன்றி விஷால் சார்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்