'மாநகரம்' இந்தி ரீமேக்: அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக் தலைப்புடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெளியான படம் 'மாநகரம்'. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானார்.

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது 'மாநகரம்'.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். 'மாநகரம்' இந்தி ரீமேக்கில் ஒரு நாயகனாக விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'மும்பைகர்' எனத் தலைப்பிடப்பட்டு, பிரத்தியேக போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கரண் ஜோஹர் மற்றும் ராஜமெளலி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தின் மூலமே விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE