மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது, புத்தாண்டை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் துருவ் விக்ரம். யார் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு ஆகிய தகவல்களை துருவ் விக்ரம் தெரிவிக்கவில்லை.
» 'மாஸ்டர்' படத்துடன் 'கோப்ரா' டீஸர்?
» இந்தி வெப் தொடர்: ஷாகிக் கபூர், விஜய் சேதுபதியுடன் நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தம்
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளதாகவும், இது விளையாட்டை மையப்படுத்திய கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago