'மாஸ்டர்' படத்துடன் 'கோப்ரா' டீஸர்?

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்துடன் 'கோப்ரா' படத்தின் டீஸரை வெளியிடப் படக்குழுவினர் பணிபுரிந்து வருகிறார்கள்.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ஆனந்த்ராஜ், மிருணாளினி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லலித் குமார் தயாரித்து வருகிறார்.

கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட படப்பிடிப்பை முடிக்க, படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. இதனிடையே, 'கோப்ரா' படத்தின் டீஸர் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை 'மாஸ்டர்' படத்துடன் இணைத்துவிட, படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த டீஸரை 'மாஸ்டர்' படத்துடன் இணைக்க எந்தவிதப் பிரச்சினையுமே இருக்காது. ஏனென்றால், 'மாஸ்டர்' படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையுமே லலித் குமாரிடம்தான் இருக்கிறது. அவர்தான் 'கோப்ரா' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியாகவுள்ளதால், 'கோப்ரா' படத்தின் டீஸரை இணைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு இறங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்