ப்ரியா பவானி சங்கர் 2 படங்களில் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

ப்ரியா பவானி சங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ஒப்பந்தமாகியுள்ள 2 படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர் இன்று (டிசம்பர் 31) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனால் திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனால், ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ள 2 புதிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'முஃப்தி' தமிழ் ரீமேக்கான 'பத்து தல' படத்தில் தாசில்தார் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இயக்குநர் பொறுப்பிலிருந்து நரதன் விலகியதால், கிருஷ்ணா இப்படத்தை இயக்கவுள்ளார். சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோருடன் நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, லாரன்ஸ் நடிக்கவுள்ள 'ருத்ரன்' படத்தின் நாயகியாகவும் ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தயாரிப்பாளர் கதிரேசனே இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

2021-ம் ஆண்டு ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'இந்தியன் 2', 'பத்து தல' மற்றும் 'ருத்ரன்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்