'ஏகே வெர்சஸ் ஏகே' படத்தை புகழ்ந்த ‘ஸ்லம்டாக்’ இயக்குநர்

By ஐஏஎன்எஸ்

அனில் கபூர், அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஏகே வெர்சஸ் ஏகே' படத்தை இயக்குநர் டேனி பாய்ல் பாராட்டியுள்ளார்.

'ஏகே வெர்சஸ் ஏகே' (AK vs AK) திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 24ஆம் தேதி அன்று வெளியானது. ஒரு கடுமையான இயக்குநர், நடிகர் ஒருவரின் மகளைக் கடத்தி மிரட்டுகிறார். அந்த நடிகர் தானே எப்படித் தன் மகளைத் தேடிப் பிடிக்கிறார் என்பதே கதை. இதில் நடிகராக அனில் கபூரும், இயக்குநர் கதாபாத்திரத்தில் அனுராக்கும் நடித்துள்ளனர். விக்ரமாதித்யா மோத்வானி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இயக்குநர் டேனி பாய்ல் வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

'ஏகே வெர்சஸ் ஏகே' படம் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. இது சிறந்த ஆரம்பத்தையும், அதை விட சிறப்பான முடிவையும் கொண்ட ஒரு அற்புதமான திரைப்படம். மனிதர்களின் ஈகோவை பற்றியும், அவர்களது இமேஜையும் குறித்து இப்படம் பேசுகிறது. மேலும் பிரபலங்களை சுற்றியுள்ள தவறான கற்பிதங்களையும் இப்படம் உடைத்து உறிகிறது.

அனில் கபூர் திரையில் தன்னை பற்றி சொல்வதற்கு தயாரானதில் ஒரு உண்மைத்தன்மையும் சுயபகடியும் உள்ளது. உண்மையில் 'ஏகே வெர்சஸ் ஏகே' மகிழ்ச்சியூட்டம் ஒரு திரைப்படம் என்றே சொல்லவேண்டும்.

இவ்வாறு டேனி பாய்ல் கூறியுள்ளார்.

டேனி பாய்ல் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தில் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE