வேலுநாச்சியாராக நடிக்கிறாரா? - நயன்தாரா தரப்பு மறுப்பு

By செய்திப்பிரிவு

வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இதற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார் - சிவகங்கை ராணி' என்று தலைப்பிடப்பட்டுப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இயக்குநர் சுசி கணேசனும் வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமொன்றை உருவாக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இதில் வேலுநாச்சியாராக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

இதற்கு நயன்தாரா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படி எந்தவொரு படத்திலும் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், 2021-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளன. மலையாளத்தில் 'நிழல்' மற்றும் 'பாட்டு' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

தமிழில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள 'நெற்றிக்கண்', ரஜினியுடன் 'அண்ணாத்த' மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார். இவை தவிர வேறு எந்தவொரு படத்துக்கும் இன்னும் நயன்தாரா சம்மதம் தெரிவிக்கவில்லை என்று அவருடைய தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்