'எனிமி' படத்துக்கான சண்டைக்காட்சியில் ஆர்யாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எனிமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. இதில் விஷால், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு. தற்போது சென்னையில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் விஷால் - ஆர்யா சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு. இதனை டூப் இல்லாமல் படமாக்கி வந்தார்கள். அப்போது ஆர்யாவுக்குக் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பயப்படும்படியான காயம் இல்லை என்று முதலுதவி அளித்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து ஆர்யா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
» ஜேஎன்யு போராட்டம், தேச விரோத கருத்து; சர்ச்சையில் சிக்குகிறதா பார்வதியின் 'வர்த்தமானம்'?
'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் மலேசியாவில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago