உலகில் எங்கு சென்றாலும் ‘3 இடியட்ஸ்’ படம்தான் எனது விசிட்டிங் கார்ட் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான படம் ‘3 இடியட்ஸ்’. சேத்தன் பகத் எழுதிய ‘ஃபைவ் பாயிண்ட் சம்ஒன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் ஆமிர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை ‘நண்பன்’ என்ற பெயரில் இயக்குநர் ஷங்கர் தமிழில் ரீமேக் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டோடு ‘3 இடியட்ஸ்’ படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இப்படம் குறித்த தனது நினைவுகளை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''என்னுடைய திரை வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ‘3 இடியட்ஸ்’ மிக மிக முக்கியமான ஒரு படம். காரணம் இளைஞர்களின் உலகத்தில் அப்படம் ஏற்படுத்திய தாக்கம். எந்த ஒரு திரைத்துறைக்கு நான் சென்றாலும் அப்படம்தான் எனக்கு ஒரு விசிட்டிங் கார்ட்.
உலகம் முழுக்க எங்கு சென்றாலும், அவர்களுக்கு இந்தி தெரிகிறதோ இல்லையோ, இந்த ஒரு படத்தால் என்னை அவர்கள் மிகவும் ஆழ்ந்த மரியாதையுடன் பார்க்கின்றனர். என் வாழ்க்கையில் எந்த ஒரு படமும் இந்த அளவு முக்கியத்துவம் பெற்றதில்லை.
ஃபர்ஹான் குரேஷி கதாபாத்திரம் தனது தந்தையுடன் ஈடுபடும் உரையாடலைப் போல எல்லா இளைஞர்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தன் தந்தையுடன் உரையாடியிருப்பார்கள். தங்கள் தனித்துவத்தை நிரூபிக்கப் போராடும் இளம் சமுதாயத்தின் நிலையை முற்றிலுமாக வெளிக்காட்டிய கதாபாத்திரம் அது. அதனால்தான் நான் எப்போதும் ஃபர்ஹானாக அறியப்படுகிறேன்''.
இவ்வாறு மாதவன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago