சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் பத்து தல

By செய்திப்பிரிவு

சிம்பு - கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துவரும் படத்துக்கு 'பத்து தல' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'முஃப்தி'. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஞானவேல்ராஜா தயாரித்து வந்த இந்தப் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். 'முஃப்தி' இயக்குநரே தமிழ் ரீமேக்கையும் இயக்கி வந்தார். படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட சில விஷயங்களால் இயக்குநர் நரதன் விலகிவிட்டார்.

தற்போது இந்தப் படத்தைச் சுற்றியிருந்த பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு, படத்தின் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா இயக்கவுள்ளார். 'முஃப்தி' ரீமேக்கிற்கு 'பத்து தல' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. கன்னியாகுமரியில் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. உடல் எடையை முழுமையாகக் குறைத்து தொடர்ச்சியாகப் பல்வேறு படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருவதால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்