'யூ டர்ன்' இயக்குநர் இயக்கும் வெப் தொடர்: அமலா பால் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'யூ டர்ன்' இயக்குநர் பவன் குமார் இயக்கிவரும் வெப் தொடர் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் அமலா பால் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

'ஆடை' படத்தைத் தொடர்ந்து 'அதோ அந்த பறவை போல', 'ஆடுஜீவிதம்', 'கடாவர்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். இதில் 'கடாவர்' படத்தை அவரே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் அமலா பால்.

இதனை 'யூ டர்ன்' படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநரான பவன் குமார் இயக்கி வருகிறார். 'குடி யெடமைதே' என்ற பெயரில் உருவாகும் இந்த வெப் தொடர் தெலுங்கில் தயாராகிறது. ஃபேண்டஸி த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த வெப் தொடரில் அமலா பாலுடன் ராகுல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் இடையே நடக்கும் டைம் லூப்பை முன்வைத்து நடக்கும் கதையாக இந்த வெப் தொடர் உருவாகிறது. மொத்தம் 8 எபிசோட்கள் இருக்கும் இந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வெப் தொடரைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக உருவாகும் ஆந்தாலஜி ஒன்றில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அமலா பால் தயாரித்து, நடித்து வரும் 'கடாவர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படங்கள், வெப் தொடர்கள் என அனைத்தையும் முடித்துவிட்டு இந்தியில் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் விஷ்சேஷ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார் அமலா பால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்