தாஜ்மஹாலில் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு

'அத்ரங்கி ரே' படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. மதுரையில் தனுஷ் - சாரா அலி கான் காட்சிகளைப் படமாக்கியது படக்குழு. அதனைத் தொடர்ந்து டெல்லியிலும் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு அக்‌ஷய் குமார், தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோரை வைத்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 21) தாஜ்மஹாலில் அக்‌ஷய் குமார், தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோரை வைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வருகிறார் ஆனந்த் எல்.ராய். இதனை அக்‌ஷய் குமார் மற்றும் தனுஷ் ஆகியோர் தங்களுடைய ட்விட்டர் பதிவுகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

'அத்ரங்கி ரே' படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE