பெண்ணாகப் பிறந்தது என் அதிர்ஷ்டம்: கங்கணா ரணவத்

By ஐஏஎன்எஸ்

தான் பெண்ணாகப் பிறந்தது தனது அதிர்ஷ்டமே என்றும், தனது உள்ளுணர்வு சொன்னபடி நடந்து வாழ்க்கையின் மென்மையான அம்சங்களை வைத்து வாழ்வதில் மகிழ்ச்சி என்றும் நடிகை கங்கணா ரணவத் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் பிரபலங்கள் கங்கணாவும் ஒருவர். பெரும்பாலும் சர்ச்சைக் கருத்துகளைப் பகிர்ந்தே செய்திகளில் இடம்பெறுபவர் இம்முறை தனது பெண்மை குறித்துப் பேசியுள்ளார். ஆனால் அந்த ட்வீட்டின் பிற்பகுதியில் தனது நிலைப்பாடுகள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

"பெண்ணாகப் பிறந்ததை என் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். நிலவின் சுழற்சியோடு ஒத்திசைவில் இருப்பது, என் உள்ளுணர்வை நம்பி என் வாழ்வின் மென்மையான அம்சங்கள் என்னை ஆதிக்கம் செலுத்த வைத்ததில் மகிழ்ச்சி. என்றும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். புடவை எனது ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துரைக்கிறது. பெண்ணாக இருப்பதை விரும்புகிறேன்.

திரைத்துறையைப் பற்றி நான் நேர்மையாக இருந்திருக்கிறேன் அதனால் அதில் பெரும்பாலானவர்களுக்கு என்னைப் பிடிக்காது. இட ஒதுக்கீடை எதிர்த்ததால் பெரும்பாலான இந்துக்களுக்கு என்னைப் பிடிக்கது, மணிகார்ணிகா வெளியீடின் போது கர்னி சேனாவுடன் மோதியதால் ராஜ்புத் இனத்தினர் என்னை மிரட்டினார்கள், இஸ்லாமிய அடிப்படை வாதிகளை எதிர்ப்பதால் நிறைய முஸ்லிம்களுக்கு என்னைப் பிடிக்காது. காலிஸ்தானிகளை எதிர்ப்பதால இப்போது சீக்கியர்களும் என்னை எதிர்க்கிறார்கள்.

என்னைப் போல ஓட்டுக்களை சாகடிக்கும் ஒருவரை எந்த அரசியல் கட்சியும் விரும்பாது என என் நல விரும்பிகள் கூறுகின்றனர். எனவே எந்த அரசியல் கட்சிக்கும் என்னைப் பிடிக்காது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என உங்களில் பலரும் நினைப்பீர்கள். ஆனால் இந்த உலகைத் தாண்டிய ஒரு உலகில், என் மனசாட்சி என்கிற உலகில் நான் பாராப்படுபவளாக இருக்கிறேன்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE