ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

தனது தந்தை ஃபாசில் தயாரிக்கும் புதிய படத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

‘சி யு சூன்’, ‘டேக் ஆஃப்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநரான மகேஷ் நாராயணன் கதை எழுத, புதுமுகம் சஜிமோன் பிரபாகரன் இயக்கும் படம் ‘மலையன்குஞ்சு’. இப்படத்தை பிரபல இயக்குநர் ஃபாசில் தயாரிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தாலும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இப்படத்தில் ஃபாசிலின் மகனான ஃபஹத் ஃபாசில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் கதை எழுதியுள்ள மகேஷ் நாராயணனே ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராகவும் பணிபுரியவுள்ளார். சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜனவரி மாதம் இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் ஃபஹத் ஃபாசிலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்