மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குநர்கள் அந்தோனி மற்றும் ஜோ இருவரும் சேர்ந்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்', 'சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' மற்றும் 'எண்ட் கேம்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ. இவர்கள் ரூஸோ சகோதரர்கள் என்ற பெயரில் ஹாலிவுட்டில் பிரபலமானவர்கள்.
மார்வல் சூப்பர்ஹீரோ படங்களில் 'இனிஃபினிடி சாகா' என்று சொல்லப்படும் முதல் மூன்று கட்டங்களைச் சேர்ந்த திரைப்படங்களில் முக்கியமான நான்கு திரைப்படங்களை இயக்கியவர்கள் ரூஸோ சகோதரர்கள். இதில் கடைசியாக இவர்கள் இயக்கிய 'எண்ட் கேம்', உலகத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைப் படைத்தது.
இதைத் தொடர்ந்து, 'தார்' கதாபாத்திரத்தில் நடித்த க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நாயகனாக நடித்த 'எக்ஸ்ட்ராக்ஷன்' என்கிற திரைப்படத்துக்கு ஜோ ரூஸோ திரைக்கதை எழுதியிருந்தார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இதன் பின் 'செர்ரி' என்கிற திரைப்படத்தை இருவரும் தயாரித்து இயக்கி வருகின்றனர். இந்தப் படம் அடுத்த வருடம் ஆப்பிள் டிவி+ வெளியீடாக வெளியாகிறது.
» நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படம் : அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ஒப்பந்தம்
» ஹாலிவுட் படங்களில் இந்தியாவை சரியாக காட்டவில்லை - ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர் கருத்து
இதன் பிறகு 'தி க்ரே மேன்' என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு திரைப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் 'கேப்டன் அமெரிக்கா'வாக நடித்த க்றிஸ் ஈவான்ஸும், 'லா லா லேண்ட்', 'ஃபர்ஸ்ட் மேன்' ஆகிய படங்களின் நாயகன் ரயன் காஸ்லிங்கும் நடிக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை டெட்லைன் என்கிற பிரபலமான ஹாலிவுட் செய்தி இணையதளம் பகிர்ந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தரப்பும் இதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
த்ரில்லர் கதையான இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் தயாரிக்கிறது. இதுவரை நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ள படங்களில் இதுதான் அதிகபட்ச பட்ஜெட் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
தனுஷ் தற்போது தமிழில் 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'அத்ரங்கி ரே' என்கிற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை, தனுஷை இந்தியில் 'ராஞ்ஜனா' திரைப்படம் மூலம் அறிமுகம் செய்த ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இது தவிர மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் டிவி தயாரிக்கும் படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். மேலும் இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து ஒரு படம், செல்வராகவனுடன் இணைந்து ஒரு படம் நடிக்கவும் முடிவாகியுள்ளது.
தனுஷ் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு, 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்' என்கிற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago