செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'அசுரன்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தைத் தயாரித்து வருகிறார் தாணு. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர்.
'கர்ணன்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தாணு தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். அதில் 'அசுரன்', 'கர்ணன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படமும் ஒன்று.
'அத்ரங்கி ரே', கார்த்திக் நரேன் இயக்கும் படம், ராம்குமார் இயக்கும் படம், மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் என பல்வேறு படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார். இதனால் செல்வராகவன் படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
» சிவன் கோவில் பூசாரிக்கு வீடு கட்ட உதவிய ஃபர்ஹான் அக்தர்
» பிப்ரவரியில் படப்பிடிப்பு; ஆகஸ்டில் வெளியீடு: வேகமெடுக்கும் ஹரி - அருண் விஜய் கூட்டணி
இந்நிலையில், "தனுஷுடன் என்றால் அது எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல் தான்" என்று எழுதுவது போன்ற ஒரு புகைப்படத்துடன் ட்வீட் செய்தார் செல்வராகவன். இதனைத் தொடர்ந்து தனுஷ் - செல்வராகவன் கூட்டணி படத்தின் பணிகள் நடைபெற்று வருவது உறுதியானது.
தற்போது இதன் பணிகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கேமிராவுக்கு பக்கத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு "முதற்கட்டப் பணிகளில்" என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன். தனுஷுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதைத் தான் இந்தப் புகைப்படத்தின் மூலம் செல்வராகவன் உணர்த்தியுள்ளார் என்று தெரிகிறது.
தனுஷ் - செல்வராகவன் கூட்டணி படத்தின் இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரியவுள்ளார். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
22 hours ago