ரஜினிக்கு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்திருப்பதால், இந்தப் பிறந்த நாள் அவருக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"மாற்றம் ஒன்றே மாறாதது. நாம் அனைவரும் அறிந்தது. விதிவிலக்காக உச்ச நட்சத்திரம் ஒன்று மட்டும் உண்டு என்று நான் அறிந்தது. முதல் சந்திப்பில் பார்த்த அதே பார்வை, பாசம், வேகம், விவேகம். நாற்பத்தைந்து வருட நண்பனே, பல்லாண்டு நீடுழி வாழ வாழ்த்துகிறேன்".
» வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி: சாய் பல்லவி
» என்ன மாதிரியான விமர்சனம் வரும் என்று தெரியும்: கெளதம் மேனன்
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகையைக் கடுமையாக விமர்சித்தவர் இயக்குநர் பாரதிராஜா. தற்போது ரஜினிக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago