அரசியல் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் என்று ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்திருப்பதால், இந்தப் பிறந்த நாள் அவருக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"அன்புள்ள நண்பர் ரஜினிக்கு, 70-வது பிறந்த நாள் வாழ்த்துகள். அற்புதமான எதிர்காலத்துக்கும் வாழ்த்துகள். அரசியலில் உங்கள் கடின முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். உங்களுடைய தனித்துவமான ஸ்டைலால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றிருக்கிறீர்கள். மேலும் உங்களுடைய தனிவழியினால் அந்தக் கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்வீர்கள் என்று நம்புகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்".
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி அளித்த பேட்டியில், ரஜினி - கமல் இருவருமே அரசியலுக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது ரஜினியின் அரசியல் வருகைக்கு சிரஞ்சீவி வாழ்த்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago