'ராக்கி' படத்தின் உரிமையைக் கைப்பற்றிய விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி

By செய்திப்பிரிவு

'ராக்கி' படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கைப்பற்றியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

'ராக்கி' படத்தின் ட்ரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பால், அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவியது. 'சாணிக் காயிதம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், 'ராக்கி' படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கைப்பற்றியுள்ளது. விக்னேஷ் சிவன் - அருண் மாதேஸ்வரன் இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

தற்போது நண்பன் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள 'ராக்கி' படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். திரையரங்குகள் சகஜ நிலைக்குத் திரும்பியவுடன் 'ராக்கி' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து 'ராக்கி' படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் கைப்பற்றி இருப்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்