சித்ராவின் எதிர்பாராத அகால மறைவு பற்றிய சோகமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம் என்று விஜய் டிவி தெரிவித்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் பிரபலமானவர் சித்ரா. அதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் அனைவருமே 'பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்றே அழைக்கத் தொடங்கினார்கள். சமூக வலைதளத்திலும் இவருக்குப் பெரிய ரசிகர் வட்டம் உண்டு.
இன்று (09.12.2020) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் சித்ராவின் மறைவு குறித்துப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சித்ரா மறைவு குறித்து விஜய் டிவி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
» சித்ரா தற்கொலை; மர்மம் இருப்பதாக தந்தை புகார்: நடந்தது என்ன?
» பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி
"சித்ரா காமராஜின் எதிர்பாராத அகால மறைவு பற்றிய சோகமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம். பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் மிகவும் விரும்பப்படும் 'முல்லை' கதாபாத்திரத்தின் மூலம் அவர் கோடிக்கணக்கான பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்த ஒரு அற்புதமான மனிதர். விஜய் டிவி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் சார்பாக, துயரமடைந்த குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்".
இவ்வாறு விஜய் டிவி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago