'ஒரு பக்க கதை' படம் ஜீ5 ஓடிடி தளத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறை வெளியீடாக டிசம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஒரு பக்க கதை'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட படம் இது. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியாகாமல் உள்ளது.
கரோனா ஊரடங்கு சமயத்தில் பல்வேறு படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் 'ஒரு பக்க கதை' படமும் அடங்கும். இப்படத்தின் மீது இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
» பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி
» 'லாபம்' திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடா?- விஜய் சேதுபதி விளக்கம்
இறுதியாக 'ஒரு பக்க கதை' படத்தின் மீதான பைனான்ஸ் சிக்கல்கள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 'ஒரு பக்க கதை' படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடுவது உறுதியாகிவிட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறை வெளியீடாக டிசம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பைனான்ஸ் சிக்கலில் சிக்கியிருந்த 'ஒரு பக்க கதை' திரைப்படம், ஒரு வழியாக வெளியாகவுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago