பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி

By செய்திப்பிரிவு

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'ரைட்டர்' படத்தில் சமுத்திரக்கனி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஆர்யா, கலையரசன், துஷாரா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கியுள்ளார் பா.இரஞ்சித். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் படம் வெளியாக உள்ளது.

இதனிடையே ரஞ்சித், படங்களையும் தயாரித்து வருகிறார். 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டார். தற்போது 'குதிரைவால்' என்னும் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து பல்வேறு படங்களைத் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பா.இரஞ்சித். இதில் புதுமுக இயக்குநர் ப்ராங்கிள் ஜாக்கப் இயக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு 'ரைட்டர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக ப்ரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக மணிகண்டன், பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்