கல்யாண் - காஜல் அகர்வால் இணையும் கோஸ்டி

By செய்திப்பிரிவு

கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு 'கோஸ்டி' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ மற்றும் ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண். இந்த இரண்டு படங்களுமே முழுக்க காமெடியை பிரதானமாகக் கொண்டு உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார். 'ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்துக்குத் தயாரானார் கல்யாண்.

ஆனால், கரோனா அச்சுறுத்தலால் படத்தின் பணிகள் தாமதமானது. தற்போது படத்தின் நாயகி உள்ளிட்ட விவரங்கள் அனைத்து முடிவானதால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது மூன்றாவது படத்தை பேண்டஸி ஹாரர் காமெடி பாணியில் உருவாக்கவுள்ளார் கல்யாண்.

இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் திருமணத்துக்குப் பிறகு ஒப்பந்தமாகியுள்ள படம் இது. சென்னையில் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 'கோஸ்டி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 20-க்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஒளிப்பதிவாளராக ஆர்.எஸ். ஆனந்தகுமார், எடிட்டராக விஜய் வேலுக்குட்டி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்