'பியார் பிரேமா காதல்' கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு இளன் இயக்கத்தில் வெளியான படம் 'பியார் பிரேமா காதல்'. கே புரொடக்ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் இணைந்து தயாரித்த இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தியிலும் இப்படம் ரீமேக்காக உள்ளது.
இப்படத்துக்குப் பிறகு இளன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. ஆனால், எதுவுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 5) இளன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யுவன் இசையமைக்கவுள்ளார். 'பியார் பிரேமா காதல்' படத்தைப் போல இப்படம் காதலை மையப்படுத்தி இல்லாமல் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் என்கிறது படக்குழு. இதில் பல்வேறு கெட்டப்களில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்.
» சாந்தனுவுக்கு ‘சுப்ரமணியபுரம்’, ‘களவாணி’ வாய்ப்புகள் நழுவியது ஏன்? - மனம்திறக்கும் பாக்யராஜ்
» ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா’ வசனம் உருவானது எப்படி? - கே.பாக்யராஜ் பகிர்வு
தற்போது ஹரிஷ் கல்யாணுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. சென்னை, மும்பை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago